தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, வரும் செப்.5-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
.வெப்ப நிலையை பொறுத்தவரை இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் இன்று நகரில் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.