கான்பூர் மாநகராட்சியில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்கள் அணிந்து ஊழியர்கள், அதிகாரிகள் வரக்கூடாது என்று ஆணையர் அர்பித் உபாத்யாய் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாநகராட்சியில் ஆணையாளராக அர்பித் உபாத்யாய் பொறுப்பேற்றுள்ளார். இதன்பின், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள ராதா, கிருஷ்ணா கோயிலில் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் டி-சர்ட், ஜீன்ஸ் அணிந்திருப்பதைக் கண்டார். இதைக் கண்ட அவர். மாநகராட்சியில் உடனடியாக ஆடை கட்டுப்பாட்டை விதிகளை அறிவித்துள்ளார். அதன்படி கான்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் செருப்புகள் அணிய தடை விதித்துள்ளார்.
அத்துடன் பான் மசாலா சாப்பிட்ட பிறகு வளாகத்தில் சுற்றித் திரியும் எந்தவொரு ஊழியரும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
ஆணையரின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ், அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் முறையான உடையில் அலுவலகத்திற்கு வர வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் செருப்புகளை அணிந்திருப்பவர்கள் மாநகராட்சிக்குள் உள்ளே நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பான் மசாலா சாப்பிட்ட பிறகு வளாகத்தில் சுற்றித் திரியும் எந்தவொரு ஊழியரும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆணையரின் அதிரடி உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.