தருமபுரியில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கையை கடித்து குதறிய தவெக தொண்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை அகற்றக்கோரி தவெக சார்பில் நேற்று (டிச.7) போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது தனியார் மதுபான பாரின் கேட்டிற்குள் குதித்து தவெகவினர் செல்ல முயன்றனர். அங்கு போலீஸார், தவெகவினரை தடுத்தனர். அப்போது ஒரு காவலரை தவெக தொண்டர் கையில் கடித்து வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் ஜெமினி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட 5 தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




