Hot News :

சென்னையில் இன்றும் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து

© News Today Tamil

சென்னையில் 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 23 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் கடந்த 7 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கோவை, அந்தமான், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 38-க்கும் மேற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அதேபோல் டெல்லி, புனே, மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 33-க்கும் மேற்பட்ட விமானங்களும் என 71 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 8-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களின் பயண விவரங்களை விமான நிறுவனங்களிடம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான பணியாட்களின் பணிநேர வரம்பு அட்டவணையில் மத்திய விமான போக்குவரத்து தளர்வுகளைத் தந்துள்ளதாகவும், டிச.10-ம் தேதிக்கு பிறகு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post இந்திய அரிசிக்கு வரி விதிக்க டிரம்ப் முடிவு
Next Post அதிரடியாக 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- அமெரிக்கா அறிவிப்பு
Related Posts