தவெக தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் நாளை (டிசம்பர் 11) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிசம்பர் 11) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், எஸ்ஐஆர், அடுத்தக்கட்ட பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை அதிகப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

