ஐஸ்வர்யம் டிரஸ்ட் நடத்திய
பூக்களைத் தேடி புன்னகை நாடி சிறப்பு விழா
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
உலக மாற்றுத்திறனாளிகள் நினைத்ததை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழா மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது. விழாவுக்கு ஐஸ்வர்யம் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் பாலகுருசாமி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக நீதி அரசர் கே.என். பாஷா, நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, மாவட்ட விஜிலென்ஸ் கமிட்டி உறுப்பினர் பாண்டியராஜா, தொழிலதிபர் மலேசியா ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வண்ணமாக தனி நடனம் குழு நடனம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நீதியரசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் மற்றும் வீரர் வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

